சட்ட விரோத மணல், கல் உற்பத்தி விற்பனை நிலையம் பருத்தித்திறை காவல்துறையினரால் சுற்றிவளைப்பு!
யாழ். பருத்தித்துறை காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் விற்பனை, கல்லரிவு உற்பத்தி விற்பனை நிலையமாக இயங்கி வந்த தும்புத் தொழிற்சாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினரால் நேற்றைய தினம் (22) இம் முற்றுகை இடம்பெற்றுள்ளது.
மேலும், தும்பு தொழிற்சாலை பணிக்காக அனுமதி பெறப்பட்ட இத் தொழிற்சாலையில் சட்டவிரோதமான மண் அகழ்வு விற்பனை மற்றும் மண் கல் அரிவு விற்பனை செயற்பாடுகள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்றைய தினம் பருத்தித்துறை தலைமை காவல் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையிலான குழுவொன்று தொழிற்சாலையை சுற்றிவளைத்தது.
சட்டவிரோத செயற்பாடுகள்
இதன்போது, நான்கு மோட்டார் சைக்கிள்களும், ஜேசீபி வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் இரு நூறு மீற்றருக்கு அதிக நீளமாகவும் சுமார் 15 அடி ஆழமும் 20 அடிக்கு மேல் அகலமும் கொண்ட பாரிய குழி தோண்டப்பட்டே இச் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
