தமிழர் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு : மூவர் அதிரடி கைது
திருகோணமலை (Trincomalee) - சம்பூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நல்லூர் பகுதியில் உள்ள அரசிற்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு டிப்பர் வாகனங்கள் மற்றும் பெக்கோ இயந்திரத்தையும் சம்பூர் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சம்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்
அனுமதிப்பத்திரம் இன்றி அரச பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக சம்பூர் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் திங்கட்கிழமை (27) மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |