தமிழர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த டிப்பர் மடக்கிப் பிடிப்பு
Kilinochchi
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
உரிய அனுமதிப்பத்திரமில்லாமல் கிளாலி பகுதியில் இருந்து வெள்ளை மணல் கடத்தி வந்த டிப்பர் ஒன்று மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த டிப்பர் சட்டவிரோதமாக மணலை ஏற்றி வருவதாக சாவகச்சேரி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை இன்றையதினம் (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த சாரதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாவகச்சேரி காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி