தமிழர் பகுதியில் சட்டவிரோத சிங்கள குடியேற்றம் - பிக்குகளுடன் வந்தவர்கள் குறித்து சந்தேகம்
Mullaitivu
Buddhism
By Vanan
முல்லைத்தீவு புலிபாய்ந்த கல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பாரிய சிங்கள குடியேற்றம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
பௌத்த பிக்குகளுடன் வருகை தந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குறித்த பகுதியை பார்வையிட்டு சென்றுள்ளனர்.
கடற்தொழில் திணைக்களம் உடந்தையா?

அங்கு சட்டவிரோதமான முறையில் சிங்கள கடற்தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அங்கு சிங்கள குடியேற்றங்கள் கடற்தொழில் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி