இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் கடத்தல் : அம்பலமாகும் தகவல்கள்
இறக்குமதி செய்யப்பட்ட 400 சொகுசு வாகனங்களில் ஆறு வாகனங்கள் இரகசியமாக கடத்தப்பட்டு பொய்யான தகவல்களை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இவ்வாறு கடத்தப்பட்ட வாகனங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த 168 சொகுசு வாகனங்களை இரகசியமாக இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 700 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
இதனடிப்படையில், இந்த தகவலின் பிரகாரம் குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
4 முதல் 6 கோடி ரூபா பெறுமதியான Montero, Landcruiser, சொகுசு வாகனங்கள் மற்றும் Nissan ரக சொகுசு வாகனங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கைக்குள் 400 சொகுசு வாகனங்கள் கடத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இரகசியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே விடுத்த கோரிக்கைக்கு இணங்க வாகனங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |