யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்தியவர் கைது
யாழில் (Jaffna) அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மணல் கடத்திய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
கைதடி பகுதியில் வைத்து 45 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்திச் சென்ற டிப்பருடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை தற்போது சாவகச்சேரி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, விசாரணைகளின் பின்னர் இன்று (19) அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்