கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டவர்
சட்டவிரோதமான முறையில் 'கொத்தல ஹிம்புட்டு' என்ற தாவரத்தை தேயிலை பக்கற்றுகளில் மறைத்து சீனாவுக்கு கடத்த முயன்ற சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, இன்று (31.03.2026) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
21 கிலோகிராம் எடையுள்ள தாவரப் பட்டைகள் கண்டெடுக்கப்பட்டது
இன்று அதிகாலை 1.40 மணியளவில் சீனாவிலுள்ள குன்மிங் நோக்கி பயணிக்கவிருந்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU-714 என்ற விமானம் மூலம் அவர் வெளியேற முற்பட்டுள்ளார்.

இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் கடமையிலிருந்த சுங்க அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் சுமார் 21 கிலோகிராம் எடையுள்ள 'கொத்தல ஹிம்புட்டு' தாவரப் பட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனையின் போது கண்டெடுக்கப்பட்ட தேயிலை பக்கற்றுகளில் இவைகள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாக்கப்பட்ட தாவர இனமாகும்
இலங்கையில் நடைமுறையில் உள்ள வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், 'கொத்தல ஹிம்புட்டு' என்பது இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல தடைசெய்யப்பட்ட ஒரு பாதுகாக்கப்பட்ட தாவர இனமாகும்.
இந்தசம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க திணைக்களத்தின் பல்லுயிர் பெருக்கம், கலாசாரம் மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்