பிரைட் ரைஸ் மற்றும் கொத்து விலைகளும் அதிகரிப்பு
பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலை ரூ. 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (31.03.2026) நள்ளிரவு முதல் விலை நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உணவு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன்,
அதிக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய தேவை
“சிற்றுண்டிகளின் விலை ரூ. 10 ஆகவும் ஒரு கோப்பை தேநீர் மற்றும் ஒரு கோப்பை பால்மா தேநீரின் விலை ரூ. 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உணவகங்கள் செயல்படும் ஒவ்வொரு இடத்திலும் மின்சாரக் கட்டணம் 180 யூனிட்டுகளைத் தாண்டும் காரணத்தால் அதிக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய தேவை ஏற்படும்.
இதனால், உணவகங்களை தொடர்ந்து நடத்துவதற்காக இந்த விலை உயர்வு நடவடிக்கை”எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, ஏப்ரல் 1 முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதால், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்