ஈரானிய நகரத்தை துளைத்த அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் குண்டுகள்! ட்ரம்ப் வெளியிட்ட பகீர் காணொளி!
ஈரானின் முக்கிய நகரமான இஸ்பஹானில் 2,000 பவுண்டு எடை கொண்ட பங்கர் பஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி அமெரிக்க தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நகரத்தில் உள்ள ஒரு பெரிய வெடிமருந்துக் கிடங்கின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அந்தத் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான ஊடுருவும் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரியொருவர் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் வெளியிட்ட காணொளி
இஸ்பஹானில் நிகழ்ந்த மாபெரும் வெடிப்புகளின் காணொளியை ட்ரம்ப் பதிவிட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
🚨 BREAKING: President Trump just posted a video of MASSIVE explosions in Isfahan, Iran following what’s believed to be U.S.-Israeli airstrikes
— Nick Sortor (@nicksortor) March 31, 2026
We clearly hit something pretty big… pic.twitter.com/3rg7aGkeEF
அந்தக் காணொளியில், தொடர்ச்சியான வெடிப்புகளும் அதைத் தொடர்ந்து ஏற்படும் கடுமையான தீ மற்றும் புகை மண்டலங்களும் பதிவாகியுள்ளன.
இது, அந்த இடத்தில் சேமிக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளால் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதைச் காட்டுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்