தடைகளுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் ஒளிர்ந்தது “கார்த்திகை தீபம்” (காணொளி)
Jaffna
People
Jaffna University
SriLanka
Karthikai theepam
By Chanakyan
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான நேற்று பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது.
நேற்று மாலை 6மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை கொண்டாடுவதற்காகச் சென்ற மாணவர்களுக்கு, பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் ஆன்மீகரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழகத்திற்குள் சென்று கார்த்திகை விளக்கீட்டு தீபங்களை ஏற்றியுள்ளனர்.