வடக்கை அழிக்கும் அரசின் நிகழ்ச்சி நிரல்: கொதித்தெழுந்த இளைஞர்கள்
மன்னாரில் (Mannar) இல்மனைட் கனிம மணல் சுரண்டலுக்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டல்களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மன்னார் மாவட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த குறித்த விழிப்புணர்வு போராட்டம் கடந்த புதன்கிழமை (06) மன்னார் பஜார் பகுதியில் ஆரம்பமாகி இரு நாட்களாக தொடர்கின்றது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக திருகோணமலை (Trincomalee) பிரதான கடற்கரையில், தளம் சூழலியல் குழுமம் ஒருங்கிணைப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் திருக்கோணமலையை சேர்ந்த பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும், நலன் விரும்பிகளும், சூழலியல் ஆர்வலர்களும் மற்றும் தளம் சூழலியல் குழுமத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் இளையோரின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவையும், வளச்சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பையும் மற்றும் சூழலியல் பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த கவனயீர்ப்பு ஒழுங்கு செய்யப்பட்டிப்பதாக சுட்டிக்காட்டப்பட்து.
இது தொடர்பிலும், போராட்டத்தின் பிண்ணனி, போராட்டக்காரர்களின் குறிக்கோள் மற்றும் பலதரப்பட்ட முக்கிய தரவுகளை உள்ளடக்கி வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய மக்கள் குரல் கருத்து,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 22 மணி நேரம் முன்
