இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள IMF முகாமைத்துவ பணிப்பாளர்
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (16) அந்த நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தரும் அவர், எதிர்வரும் புதன்கிழமை வரை இங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID
'டித்வா' சூறாவளியின் சேதங்கள்
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் 'டித்வா' சூறாவளியினால் நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து அவதானிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் இலங்கையை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |