சீனாவின் நிதி உத்தரவாதமின்றி இலங்கைக்கு உதவி
சீனாவின் நிதி உத்தரவாதமின்றி இலங்கைக்கு நிதி உதவியை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதில் சீனாவின் உத்தரவாதம் மாத்திரம் தடையாக உள்ள பின்னணியிலேயே,சர்வதேச நாணய நிதியம் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதிய உதவி

சீனாவின் நிதி உத்தரவாதமின்றி இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் தனது உதவியை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் எப்போதாவது பயன்படுத்தக்கூடிய கொள்கையை நிதியம் பின்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கடன் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் தனது கடன் வழங்குநர்களுடன் தொடர் பேச்சுக்களை முன்னெடுத்து வருவதாக நிதியத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கை விடயத்தில் சர்வதேச நாணய நிதியம் பின்பற்றக்கூடிய கொள்கைகள் குறித்து தற்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS