சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைக்குமா! பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அதிபர் அலுவலகம் வெளியிட்ட விசேட அறிக்கை
International Monetary Fund
Sri Lanka Economic Crisis
President of Sri lanka
IMF Sri Lanka
By Kanna
இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்து வருவதாக அதிபர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அதிபர் அலுவலகம் இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.
நாட்டில் பொருளாதார பிரச்சினைகளைத் தணிக்கவும் நல்ல பொருளாதார நடைமுறைகளை ஏற்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறும் நோக்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
