நிதி நெருக்கடிக்கு தீர்வு? இலங்கைக்கு கை கொடுக்கிறது IMF
sri lanka
help
imf
By Vanan
சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) 816 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கு இலங்கை தகுதி பெற்றுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் கிறிஸ் லீனா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சர்வதேச நாணய நிதியம் அதன் உறுப்பு நாடுகளின் வெளிநாட்டு இருப்புக்களை வலுப்படுத்த 650 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
பல நாடுகளின் நிதி நெருக்கடிக்கு இதன் மூலம் வலுவான தீர்வை வழங்க முடியும். இருப்பினும், குறித்த கொடுப்பனவிற்காக சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்களுக்கு உறுப்பு நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இதற்கமைய, இலங்கையும் உரிய தொகையிலிருந்து 816 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி