இலங்கைக்கான கடன் உதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிவிப்பு!
சீனா உள்ளிட்ட ஏழு நாடுகளின் குழு முதலாவது மெய்நிகர் வட்ட மேசை கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கை உட்பட்ட நாடுகளின் கடன்கள் தொடர்பில் ஆராய்வதற்கே இந்த மெய்நிகர் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சீனா, இந்தியா, சவுதி அரேபியா உள்ளிட்ட ஏழு நாடுகளின் குழுவின் அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நடுத்தர நாடுகளும் பங்கேற்பு
எத்தியோப்பியா, சாம்பியா மற்றும் கானா ஆகிய 20 பொதுவான கட்டமைப்பின் கீழ் கடன்களை கோரிய நாடுகளின் அதிகாரிகளும், தங்கள் சொந்த கடன் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை, சுரினாம் மற்றும் ஈக்வடார் போன்ற நடுத்தர வருமான நாடுகளின் அதிகாரிகளும் இந்த வட்டமேசை சந்திப்பில் பங்கேற்பார்கள்.
நாணய நிதயம் உலக வங்கி கூட்டம்
இந்த கூட்டம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் 20 குழுவின் தற்போதைய தலைமை நாடான இந்தியா ஆகிய தரப்புக்களால் இணைந்து எதிர்வரும் 23 முதல் 25ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ள நேரடி வட்டமேசை சந்திப்புக்கு முன்னோடியாக இடம்பெறுகிறது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த கால கூட்டங்களில் முறையான ஆரம்பம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்தக் கூட்டங்கள் இடம்பெறுவது முக்கிய அம்சங்களாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
