புதிய ஜனாதிபதி மீது ஐஎம்எப் வைத்துள்ள நம்பிக்கை
தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை நிலையான, வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை அடைய முடியும் என நம்புவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளிரினால் அநுரவிற்கு அனுப்பட்ட வாழ்த்து கடித்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐஎம்எப் வேலைத்திட்டம் உட்பட இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த இலக்குகளை அடைவதற்கு நிலையான பங்காளியாகவும் பங்குதாரராகவும் தொடர்ந்து பணியாற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐஎம்எப் - இலங்கை உறவு
இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிகளில் ஒன்றான இலங்கையை மீட்சிக்கான பாதையில் கொண்டு செல்ல உதவிய கடின வெற்றிகளை கட்டியெழுப்புவதற்கு அநுர குமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன் படி, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் உறவை ஆழப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |