ஐ.எம்.எப் இன் கடன் கிடைக்காவிட்டால் பேராபத்து! எச்சரிக்கும் மத்திய வங்கி
Central Bank of Sri Lanka
Sri Lanka
IMF Sri Lanka
By pavan
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தினை முன்னெடுக்கமுடியாத நிலையேற்பட்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளிற்கு மத்தியில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருகின்றது.
இலங்கை மீதான திட்டம்
இந்தநிலையில், சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கை மீதான திட்டம் தடம்புரண்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் முதலீட்டாளர்களின் எதிர்மறை உணர்வுகள் காரணமாக பெரும் பொருளாதார இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்