இலங்கையின் பொருளாதாரம்..! உலக வங்கி வெளியிட்ட அறிக்கை
உலக வங்கியால் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் இலங்கையின் பொருளாதாரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த அறிக்கையில் சிறிலங்காவின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்பு மற்றும் வலுவான பொருளாதார சீர்திருத்த திட்டம் அவசியம் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது முக்கியம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி
சிறிலங்கா அரசாங்கம் கடன் மறுசீரமைப்புக்களை விரைவுபடுத்துவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை விரைவில் பெற்றுக் கொள்ள முடியுமென உலக வங்கி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றிய உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இந்த விடயத்தினை தெரிவித்திருந்தார்.
பொருளாதார வளர்ச்சி குறைவடைவதால் அதன் பாதகமான விளைவுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளை பாரியளவில் பாதிக்குமெனவும் அவர் சுட்டிக்காயிருந்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.