இலங்கையைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்
பொருளாதார நெருக்கடியில் இருந்து, மீள்வதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) பாராட்டு தெரிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும் (Shehan Semasinghe), சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருமான கென்ஜி ஒகமுரா (Kenji Okamura) உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் நேற்று (15) ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சமூக-பொருளாதார முன்னேற்றங்கள்
இந்த மாநாடு கொள்கை வகுப்பாளர்கள், சிவில் சமூகம், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் ஏப்ரல் 19 வரை நடைபெறவுள்ளது.
இரு தரப்பினரும் மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தியதாக செஹான் சேமசிங்க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன் போது ஒகமுரா, சர்வதேச நாணய நிதியத்தின் தொடக்கத்திலிருந்து இலங்கை அடைந்துள்ள கடின உழைப்பால் ஈட்டிய வெற்றிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன (Mahinda Siriwardana) ஆகியோருடன் இணைந்து, செஹான் சேமசிங்க, ஐ.எம்.எப்பின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரிடம் சமீபத்திய சமூக-பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து விளக்கியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |