இலங்கையிடமிருந்து வலுவான வரவு செலவுத் திட்டத்தினை எதிர்பார்க்கும் ஐ.எம்.எவ்
இலங்கையிடமிருந்து வலுவான வரவு செலவுத் திட்டத்தை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஏனென்றால் அதன் மூலமாக அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க முடியும் என இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் இன்று (20) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு (2022) வரலாறு காணாத அளவுக்கு மிக மோசமான நிதி நெருக்கடியினை இலங்கை சந்தித்திருந்ததும் அந்நியச் செலாவணியின் கையிருப்பும் வெகுவாக குறைந்திருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு (2023) மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட முதற்கட்ட கடன்தொகையின் மூலம் நாட்டை மீள கட்டியெழுப்பி ஓரளவு ஸ்திரப்படுத்தி, பணவீக்கத்தை குறைத்து, இருப்புக்களை மீள கட்டியெழுப்ப முடிந்தது என்றும் அவர் இதன் போது தெரிவித்தார்.
ஊழியர்மட்ட ஒப்பந்தம்
இருந்தபோதும், பொது வருவாயை அதிகரிப்பதில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது. அதில் இந்த ஆண்டு (2023) 15% பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதையும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
அடுத்த வருடத்திற்குள் இதிலிருந்து மீள்வதற்கு இலங்கை முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
அதற்காக அதன் அதன் இரண்டாம் தவணைக் கட்டணமான சுமார் 330 மில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளது.
இதற்கான ஊழியர்மட்ட ஒப்பந்தமானது நேற்றைய தினம் (19) கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையில் நிலவிய பொருளாதார ஸ்திரத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்புவதே எமது நோக்கம் என்றும், வருமனத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே நோக்கம் என்றும் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் இதனை அடையக்கூடிய வலுவான வரவு செலவுத் திட்டத்தை எதிர்பார்க்கிறோம் என அவர் வலியுறுத்தினார்.