சிறிலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - ஐஎம்எஃப் செயற்பாட்டில் ஏற்படுமா தாக்கம்!
நாட்டின் கடன் வழங்குநர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.
குறைவடையவுள்ள பண வீக்கம்

மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆரம்பத் தீர்மானத்தில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பப்பட்டது
அதன் போது, தங்களுக்குத் தெரிந்தவரை சர்வதேச நாணய நிதியம் இது தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாத இறுதியில் பணவீக்கம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.