யாழிற்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியம்
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) குழு இன்று(14) யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளனர்.
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உள்ளிட்ட பல தரப்பினருடனும் நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சந்திப்பில் ஈடுபடவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்தக் குழு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டது.
யாழில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு
அடுத்தகட்ட கடன் பெறுகைகள் தொடர்பில் தற்போது முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே இலங்கைக்கான பயணத்தின் ஒரு பகுதியாக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடமாகாணத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பலரையும் இந்தக்குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
சூடுபிடிக்கும் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விவகாரம்! ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் வேட்பாளர்கள்
செந்தில் தொண்டமான்
அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில் பீட்டர் ப்ரூயர் (சிரேஸ்ட பணித் தலைவர்), சர்வத் ஜஹான் (IMF வதிவிடப் பிரதிநிதி), சோபியா ஜாங் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), ஹுய் மியாவ் (சிரேஸ்ட நிதித்துறை நிபுணர்), ஹோடா செலிம் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), டிமிட்ரி ரோஸ்கோவ் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), சந்தேஸ் தூங்கானா (பொருளாதார நிபுணர்), மற்றும் மனவே அபேயவிக்ரம (உள்ளூர் பொருளாதார நிபுணர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |