தொழிலாளர்களை ஒடுக்கி அடிமைகளாக்கும் புதிய சட்டம் - விஜித ஹேரத் கண்டனம்

Vijitha Herath Sri Lanka IMF Sri Lanka
By Beulah Jul 17, 2023 11:19 AM GMT
Report

உழைக்கும் மக்களை அடிமையாக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளை அரசாங்கம் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று(16)  இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து இந்நாட்டு உழைக்கும் மக்களின் உரிமைகள் பறிக்கின்றன என குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய சட்டமூலம்

தொழிலாளர்களை ஒடுக்கி அடிமைகளாக்கும் புதிய சட்டம் - விஜித ஹேரத் கண்டனம் | Imf Terms New Labour Law Sl Vijitha Herath

இதுதொடர்பில் மேலும் அவர்,

“இதுவரை உழைக்கும் மக்களின் உரிமைகளை ஓரளவு நிலைநிறுத்துவதற்கு பங்களித்த 13 சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உழைக்கும் மக்களின் தொழில் உரிமைகளை மேலும் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஒரு நாடு பொருளாதார ரீதியில் திவாலாகும் இந்த நேரத்தில், உழைக்கும் மக்களின் உரிமைகள் மேலும் பாதுகாக்கப்பட வேண்டும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆனால், கடன் மறுசீரமைப்பு மற்றும் நிவாரணம் மூலம் கொண்டு வரப்படும் இந்த தொழிலாளர் சட்டங்கள் மூலம் ஏழை மக்களை மேலும் நசுக்குவதே அரசாங்கத்தின் திட்டம்.

தொழிற்சங்க உரிமை

தொழிலாளர்களை ஒடுக்கி அடிமைகளாக்கும் புதிய சட்டம் - விஜித ஹேரத் கண்டனம் | Imf Terms New Labour Law Sl Vijitha Herath

தொழில் உரிமைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட 1999 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க தொழிற்சங்கத்தை அமைப்பதற்கான உரிமையும் புதிய சட்டத்தின் மூலம் ஒழிப்பதற்கான முயற்சிகள் மேற்டிகொள்ளப்படுகின்றன.

அதன்படி, முதலாளிக்கு அறிவிக்காமல் அவசரத் தொழில் உரிமைக்காகச் செயல்படுவது நீதிமன்றத்தால் தண்டனைக்குரிய குற்றமாக மாற்றத் தயாராக உள்ளது.

தொழிற்சங்கங்களை நிறுவும் பொறிமுறையை பலவீனப்படுத்தும் முன்மொழிவுகள் இதில் உள்ளன.

மேலும், பெண்கள் பணிபுரிய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்து கடமைகளையும் ரத்து செய்ய முயற்சித்து வருகின்றனர்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நம் நாட்டு உழைக்கும் மக்கள் அடிமைகளாகி அடிமை வியாபாரம் நிலைநாட்டப்படும்.

எனவே தொழிலாளர்களை ஒடுக்கி அடிமைகளாக்கும் இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் அரசுக்கு வலியுறுத்துகிறோம்” என்றார்.    

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025