வாகன இறக்குமதி வரி திருத்தம்: இலங்கை அரசுக்கு IMF எச்சரிக்கை
இலங்கையினால் வாகன இறக்குமதியின் போது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத கூடுதல் வரி, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எட்டப்பட்ட உடன்பாடுகள் மற்றும் அர்ப்பணிப்புகளை மீறும் ஒரு செயலாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் எமன் பாபஜோர்ஜியவ் (Eaman Papageorgiou) இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கூடுதல் வரி
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அரசாங்கத்தினால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரி திருத்தமானது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் இலங்கை வழங்கியிருந்த வாக்குறுதிகளை மீறுவதாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த 50 வீத கூடுதல் வரியானது மூன்று மாத காலத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும் என நாணய நிதியம் நம்புகிறது. இதனடிப்படையில், இந்த கூடுதல் வரி மீண்டும் நீக்கப்படும் என எதிர்பார்ப்பதாக பாபஜோர்ஜியவ் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்தின் கீழ் இறக்குமதித் தடைகளை விதிப்பதையோ அல்லது இதுபோன்ற அதிகப்படியான வரிகளை விதிப்பதையோ தாங்கள் ஊக்குவிப்பதில்லை என்றும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சுதந்திர வர்த்தகக் கொள்கையைப் பேணுவது அவசியமானது என்றும் இதன்போது வலியுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
3 நாட்கள் முன்