அதிபர் தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
சிறிலங்கா அதிபர் தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தலானது அரசியலமைப்பின் பிரகாரம் இவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் நடத்தப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கு ஆணைக்குழு தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி ஒதுக்கீடு
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிபர் தேர்தலுக்காக ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையென்றால் கூடுதலான பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேவையான எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கமிஷன் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |