மூளைப் பக்கவாதம் ஏற்பட்டவுடன் உடனடி ஆங்கில மருத்துவம்!
உலக சுகாதார அமைப்பு (WHO) 2021ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, இலங்கையில் ஒவ்வொரு இலட்சம் மக்களிலும் 209 பேர் (அதில் 113 பெண்களும், 96 ஆண்களும் ) ஆண்டுதோறும் மூளைப் பக்கவாதம் காரணமாக உயிரிழக்கின்றனர்.
இது நாட்டின் சுகாதார அமைப்பில் ஒரு தீவிர எச்சரிக்கையாகும் என அரச வேலையற்ற சித்த மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது.
ஆங்கில சிகிச்சை பெற்ற பின்னர் சித்த சிகிச்சை அவசியம் அரச வேலையற்ற சித்த மருத்துவர்கள் சங்கத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டதாவது, மூளைப் பக்கவாதம் ஏற்பட்டால் முதலில் ஆங்கில மருத்துவமனைக்கு சென்று உயிர் காப்பாற்றும் சிகிச்சை பெறுவது முக்கியம்.
அதன்பின்னர், உடல் இயக்கமும் நரம்பு ஒத்துழைப்பும் மீளச் செய்ய சித்த சிகிச்சை அவசியமாகும்.இரண்டு முறைகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நோயாளியின் முழு மீள்நலம் சாத்தியம்.
பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகள்
மூளைப் பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகள் ஆங்கில மருத்துவ சிகிச்சையைப் பெற்ற பின் 14 முதல் 60 நாட்களுக்குள் சித்த மருத்துவ சிகிச்சையைத் தொடங்கினால் குணமடையும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், பலர் அந்த வாய்ப்பை இழக்கின்றனர்.

படுக்கையிலிருந்து எழ முடியாமல் தவிக்கும் நோயாளிகள் ஒருகாலத்தில் குடும்பத்தின் தாங்கும் தூணாக இருந்தவர்கள். அவர்களை மீண்டும் நம்பிக்கையுடன் வாழ வைக்க சித்த மருத்துவம் உதவக்கூடியது.
இன்னும் நம்பிக்கை இருக்கிறது என்ற செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது நம்முடைய பொறுப்பு அறிவியல் ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி சித்த மூலிகைகளில் காணப்படும் சில மூலப்பொருட்கள் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் (Neuroprotective), ஆக்சிடேஷனைத் தடுக்கக் கூடிய (Antioxidant) மற்றும் அணு வீக்கத்தைச் சரிசெய்யும் (Anti-inflammatory) பண்புகளைக் கொண்டுள்ளன என்பது அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சங்கம் தெரிவித்துள்ளது.
இணைந்த மருத்துவமுறைதான் வாழ்வை காக்கும் வழி மூளைப் பக்கவாதம் போன்ற நரம்பு சார்ந்த நோய்களுக்கு ஆங்கில மருத்துவமும் சித்த மருத்துவமும் இணைந்து செயல்பட வேண்டும். இதுவே மக்களின் உயிரையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாக்கும் ஒரே பயனுள்ள வழி.
மூளைப் பக்கவாத விழிப்புணர்வு நாள் (World Stroke Day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இவ்வறிக்கையை வெளியிட்டதாக வேலையற்ற சித்த மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 7 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்