பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்
கொவிட் – 19 வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2021-05-20 ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கும் ,கண்டி, வவுனியா, மாத்தறை மற்றும் குருநாகல் பிராந்திய அலுவலகங்களுக்கும் பொது மக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றது என்பதை அறியத் தருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ள அத்தியாவசிய சேவைகக்காக அலுவலக வேலை நாட்களில் மு.ப. 8.00 மணி தொடக்கம் பி.ப. 4.30 மணி வரை கீழ்க் காணும் தொலைபேசி இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் ஊடாக உரிய பிரிவைத் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.