கனடாவில் புதிதாக குடியேறுவோருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
கனடாவில் (Canada) புதிதாக குடியேறும் வெளிநாட்டு பிரஜைகள் அதிக வாகன காப்புறுதி கட்டணங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கனடாவில் புதிதாக குடியேறுவோர் பல அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சிலர் மாதாந்தம் 300 முதல் 450 டொலர்களை வாகன காப்புறுதி கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூடுதல் தொகை
இந்த நிலையில், கனடாவில் புதிதாக குடியேறும் வெளிநாட்டு பிரஜைகள் வாகனங்களை செலுத்துவதற்காக கூடுதல் தொகையை செலுத்த நேரி்ட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கனடாவில் வாகனம் செலுத்துவது தொடர்பிலான அனுபவத்தின் அடிப்படையில் இந்த கட்டணங்கள் அளவீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலர் நீண்ட நாட்களாக சொந்த நாடுகளில் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொண்டவர்கள் எனவும், எந்தவிதமான மோட்டார் போக்குவரத்து தவறுகளும் இழைக்காதவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், கனடாவில் புதிதாக வாகனம் செலுத்துவதனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூடுதல் தொகை காப்புறுதி கட்டணம் அறவீடு செய்யப்படுகின்றது என கனடாவில் வசித்து வரும் வெளிநாட்டு குடியேறிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |