விரைவில் வீழ்ச்சியடையும் எரிபொருள் விலை: உலக நாடுகளுக்கு நம்பிக்கையளித்த அமெரிக்கா
எரிசக்தி விலைகள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் கணிசமாகக் குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஈரான் போரினால் சர்வதேச சந்தையில் எரிசக்தி விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன.
தற்போதைய நிலை
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தற்போதைய போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள விலை ஏற்றம் தற்காலிகமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதல்கள் முடிவுக்கு வந்த பிறகு எண்ணெய் விலைகள் தற்போதைய நிலையை விட மிகவும் குறைவாக இருக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு வரி வசூலிப்பதன் மூலம் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த ஈரான் முயற்சி செய்து வருவது குறித்தும் பெசன்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்த வரி வசூலிப்பு நடவடிக்கைகள் மூலம் அந்த நாட்டிற்குப் பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை எனவும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் முற்றுகைகள் ஈரானின் நிதி ஆதாரங்களைத் தொடர்ந்து முடக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |