ட்ரம்பால் ஏற்பட்ட பேரிடி : பாரிய அடிவாங்க போகும் நாட்டின் பொருளாதாரம்
நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படவுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரயல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வசந்த அதுகோரல மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம்
ட்ரம்ப் எடுத்த முடிவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் மாற்றுச் சந்தையை தேடுவதன் மூலம் அமெரிக்காவின் வரி நெருக்கடியை சமாளித்துக் கொள்ள வாய்ப்பாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் பத்து சதவீதம் குறைந்தபட்ச வரியை ட்ரம்ப் அறிவித்த நிலையில், 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து மூன்று பில்லியன் டொலர்களுக்கு மேல் இறக்குமதி செய்தது.
புதிய வரிகள்
இந்தநிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய வரிகள் இலங்கைப் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்துள்ள புதிய பரஸ்பர வரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஒரு குழுவை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
