ட்ரம்ப் வரி விதிப்பின் எதிரொலி: பாரிய சரிவு கண்ட வைர ஏற்றுமதி
குஜராத் (Gujarat) மாநிலம் சூரத்தில் வைர ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் (Donald Trump) விதித்திருக்கும் 50 சதவீத வரி விதிப்பினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியா மீது ட்ரம்ப் விதித்த 25 சதவீத வரி மற்றும் கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியால் நாட்டின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வைர ஏற்றுமதி
அந்த வரிசையில், குஜராத் மாநிலம் சூரத், வைர நகரமாக மின்னிக் கொண்டிருந்த நிலையில் புதிதாக ஏற்றுமதி ஆர்டர்கள் எதுவும் வராமல் பொலிவிழந்து காணப்படுவதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வந்த வைர ஏற்றுமதி ஆர்டர்களும், ட்ரம்பின் அறிவிப்பினால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வைர தொழிற்சாலைகள் தெரிவித்துள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னமும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், ஆண்டின் மொத்த வைர ஏற்றுமதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பாதிக்கும் மேல் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால், ஆர்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
