முக்கிய சில பொருட்களுக்கு இறக்குமதி தடை - வெளியாகவுள்ள புதிய வர்த்தமானி!
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Sri Lanka Government Gazette
New Gazette
Economy of Sri Lanka
By Pakirathan
சில முக்கிய இறக்குமதி பொருட்களின் இறக்குமதிக்கு தடைவிதித்து இன்றைய தினம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றின் இறக்குமதியை தடை செய்வது தொடர்பில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வர்த்தமானி
இந்த வர்த்தமானி அறிவித்தலில் படி ஜூன் 1 ஆம் திகதி முதல் பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களின் இறக்குமதி தடை நடைமுறைக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது.
பணவியல், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி