இந்தியாவிலிருந்து மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்யத் தீர்மானம் : அமைச்சர் உறுதி
India
Economy of Sri Lanka
Nalin Fernando
Egg
By Kathirpriya
இந்தியாவில் இருந்து மீண்டும் முட்டையை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளதாக வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தியாளர்களுடன் இன்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
குறைக்க முடியாது
"முட்டை விலையை குறைக்குமாறு விடுத்த கோரிக்கையை உற்பத்தியாளர்கள் நிராகரித்துள்ளதால், முட்டை இறக்குமதியை விரைவில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்றார்.
முட்டை ஒன்றின் விலையை 55 ரூபாய்க்கு கீழ் குறைக்க முடியாது என முட்டை வியாபாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்