வெளிநாடுகளிலிருந்து மரக்கறி இறக்குமதி : போலிக்குற்றசாட்டை மறுக்கும் மகிந்த அமரவீர
வெளிநாடுகளிலிருந்து மரக்கறி வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு உண்மையில்லையென விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை உள்நாட்டு உருளைக் கிழங்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் பியதிஸ்ஸ (Nimal Piyatissa) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகள் ளெிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி
மரவள்ளி, வத்தாளி உள்ளிட்ட கிழங்கு வகைகளும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக மரக்கறி வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பன மட்டும் இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
