இராணுவத் தளபதி பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
Vaccine
Shavendra Silva
Army
People
By Chanakyan
தமக்கு சொந்தமான கிராம உத்தியோகத்தர் பிரிவு அல்லது தமது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றில் மாத்திரம் தமக்கான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவலின் படி,
அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ற, தரமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எனவே தமக்கு சொந்தமான பகுதிகளில் மாத்திரம் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுங்கள்.
வேறு பகுதிகளிலிருந்து சென்று தடுப்பூசி பெற்றுக்கொண்டமையினாலேயே, கடந்த சில தினங்களாக தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் சில அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.