இலங்கையில் இளைஞர், யுவதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக மீள்வதற்கு இளைஞர், யுவதிகள் தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவத்துறை பேராசிரியர் நீலிகா மாளவிகா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு கொரோனா தொற்றின் கடுமையான விளைவுகளை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் கூறியுள்ளார்.
வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் பாரதூரமான நிலைமைகளை தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொள்வதன் மூலம் தவிர்க்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள மூத்த பிரஜைகளே அதிக ஆபத்து உள்ளவர்களாக அடையாளப்படுத்தப்பட்டாலும் இளைஞர், யுவதிகளுக்கும் பாரதூரமான நோய் அறிகுறிகள் ஏற்படாது என கூற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே அனைத்து இளைஞர், யுவதிகளும் கட்டாயம் தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.