வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
By Thulsi
வெள்ளவத்தை (Wellawatte), கல்கிஸ்ஸை மற்றும் பாணந்துறை ஆகிய கடலோரப் பகுதிகளில் முதலை அச்சுறுத்தல்கள் மீண்டும் எழுந்துள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை உயிர்காக்கும் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் எச்சரிக்கை
முதலைகளால் ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்ப்பதற்கு அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வலியுறுத்தினார்.
முதலைகளைக் கண்டதாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடமிருந்தான முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இந்தக் கடலோரப் பகுதிகளைப் பயன்படுத்துகையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி