பொது மக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள முக்கிய தகவல்
சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களைப் பின்பற்றி மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிகால் தல்துவ தெரிவித்துள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக நேற்றைய தினம் நாடு பூராகவும் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இதுவரை 81,809 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை குறைத்துவருது கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அசமந்தப் போக்கும் காணப்படுகின்றது.
இது தொடர்பில் சிறிலங்கா காவல்துறையினர் அவதானித்து வருகின்றனர். எனவே சோதனைகளை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார திணைக்களப் பணிப்பாளர் சுகாதார வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.
எனவே கொரோனா தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாடு வழமைக்குத் திரும்பவும், மக்கள் சுதந்திரமாக நடமாடவும், மக்கள் வழிகாட்டல்களை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என நிகால் தல்துவ தெரிவித்துள்ளார்.