சிவனொளிபாதமலை செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
சிவனொளிபாதமலைக்கு(Sri Pada) செல்லும் யாத்திரீகர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அதன்படி, இரத்தினபுரி ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் 045 347 1122 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
யாத்திரீகர்களுக்கு ஏற்படும் அசௌகரியம்
அதேநேரம், நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் 052 205 5522 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினைகளை முறையிட முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்