புத்தளத்திலிருந்து கொழும்பு பயணிக்கும் வீதி வெள்ளத்தில் மூழ்கியது! முக்கிய அறிவித்தல்
srilanka
colombo
travel
peoples
By S P Thas
புத்தளத்தின் இரண்டு வீதிகள் நீரில் மூழ்கியதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதனால் மாற்று வழிகளை போக்குவரத்திற்காக பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் கோரியுள்ளது.
புத்தளம் நகரிலிருந்து கொழும்பு நோக்கிய பாலாவி பகுதி புத்தளத்திலிருந்து குருணாகல் வீதியின் அரலிய உயன பகுதி, 2ம் கட்டை, தம்பபன்னி ஆகிய பகுதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன