அவசர தொலைபேசி இலக்கம் தொடர்பில் காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Police spokesman
Sri Lanka Police
Sri Lanka
By Sathangani
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 118 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்படும் தகவல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அதன்படி, தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளையும் இந்த இலக்கத்திற்கு வழங்க முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
இதேவேளை இவ்வாறு கிடைக்கும் முறைப்பாடுகள் தனிக் குழுவொன்றினால் கண்காணிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.
118 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொண்டு பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி