தமிழ் அரசியல் கைதி ஆனந்தன் சுதாகரன் தொடர்பில் நாடாளுமன்றில் முக்கிய அறிக்கை..
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஆனந்தன் சுதாகரன் (சச்சிதானந்தம் ஆனந்தன் சுதாகரன்) குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே ஆனந்தன் சுதாகரன் குறித்த விடயத்தை அமைச்சர் வெளிப்படுத்தினர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல்
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் சபையில் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதில் சாதாரண பொதுமகன் என குறிப்பிட்டு ஆனந்தன் சுதாகரன் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
பிலியந்தலை பகுதியில் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆனந்தன் சுதாகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது 92 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்" என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |