தரம் குறைந்த தேங்காய் எண்ணெயை நாட்டிற்குள் கொண்டுவரும் இறக்குமதியாளர்கள் - புத்திக டி சில்வா
Srilanka
coconutoil
importers
Buddhika d Silva
By MKkamshan
நாட்டிற்குள் தரம் குறைந்த தேங்காய் எண்ணெயை கடத்த முயல்கின்றனர் என புத்திக டி சில்வா (Buddhika de Silva) குற்றம்சாட்டியுள்ளார்.
வரிச்சலுகையை பயன்படுத்தி தரம் குறைந்த தேங்காய் எண்ணெயை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இறக்குமதியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என அனைத்து சிறிலங்கா பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புத்திக டிசில்வா மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியை கோரினோம் அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்குவதை தாமதிக்கின்றது என கூறினார்.
இந்நிலையில் இறக்குமதியாளர்கள் தற்போது தரமற்ற தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய முயல்கின்றனர் எனவும் ஐம்பது வீத வரிச்சலுகையை கோரியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.