சம்பந்தனின் இழப்பு நிரப்ப முடியாத இடைவெளி : இம்ரான் எம்.பி அனுதாபம்

Trincomalee R. Sampanthan Imran Maharoof
By Jaso Jul 01, 2024 03:49 PM GMT
Report

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நிறைந்த அனுபவசாலியுமான ஆர்.சம்பந்தன் ஐயாவின் இழப்பு நிரப்பு முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

காலஞ்சென்ற எனது தந்தை எம்.ஈ.எச்.மகரூப் போன்றே இவரும் 1977 இல் முதன் முதல் நாடாளுமன்றம் தெரிவானார். இவரது நாடாளுமன்ற அனுபவம் என்னுடைய வயதையும் விடவும் அதிகமாகும். நாடாளுமன்றத்தில் சட்ட ரீதியான விவாதங்களில் நிறைந்த பங்களிப்பை வழங்கியவர் இவர்.

இரா. சம்பந்தன் மறைவு : கனடா உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள இரங்கல்

இரா. சம்பந்தன் மறைவு : கனடா உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள இரங்கல்

நாடாளுமன்ற பிரவேசம்

1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்ட இவர் 1983 இல் இவரது கட்சித் தீர்மானத்திற்கமைய நாடாளுமன்றத்தைப் புறக்கணித்ததால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். 1997 இல் அமரர் தங்கத்துரையின் இழப்பினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அடுத்த விருப்பு வாக்கு நிலையிலிருந்த இவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.பின்னர் 2001 முதல் இறக்கும் வரை தொடர்ச்சியாக வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.

சம்பந்தனின் இழப்பு நிரப்ப முடியாத இடைவெளி : இம்ரான் எம்.பி அனுதாபம் | Imran Condolences To Sampanthan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியைப் பெற்றதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை இவர் வழங்கி வந்தார்.

சிங்களவரின் மரியாதையையும் பெற்ற தலைவர் சம்பந்தன் : தமிழக முதலமைச்சர் இரங்கல்

சிங்களவரின் மரியாதையையும் பெற்ற தலைவர் சம்பந்தன் : தமிழக முதலமைச்சர் இரங்கல்

வயதான காலத்திலும் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் மக்களது வகிபாகம், தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமை தொடர்பில் சர்வதேச ரீதியாக பல்வேறு தரப்பினருடனும் பேசிவந்துள்ளார்.

முஸ்லிம் மக்களுடன் அந்நியோன்னம்

முஸ்லிம் மக்களுடனும் மிகவும் அந்நியோன்யமாக நடந்துள்ளார். கடந்த காலங்களில் இவரது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகளில் பள்ளிவாயல்கள் புனரமைப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை நான் அறிவேன்.

சம்பந்தனின் இழப்பு நிரப்ப முடியாத இடைவெளி : இம்ரான் எம்.பி அனுதாபம் | Imran Condolences To Sampanthan

2015 இல் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு பக்கத்துணை வழங்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். இதில் சம்பந்தர் ஐயாவின் பங்கு அளப்பரியது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் இரா.சம்பந்தனுக்கு அஞ்சலி!

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் இரா.சம்பந்தனுக்கு அஞ்சலி!

இலங்கை அரசியல் வரலாற்றில் 2015 இல் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளார். இவரது இழப்பினால் துயருறும் இவரது குடும்பத்தினருக்கும், பொது மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி