இம்ரான் கானின் மனைவிக்கும் கொரோனா
covid-19
imran khan
By Vasanth
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மனைவியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பிரதமருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்று நாட்டின் சுகாதார அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பிரதமருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடக அறிக்கையின்படி, புஷ்ரா பீபியின் உடல்நிலை குறித்து தெரியவில்லை பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறிய அறிகுறிகளால் அவரது வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளார்.