இம்ரான்கானுக்கு மூன்று ஆண்டுகால சிறைத்தண்டனை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குரிய பரிசுப்பொருட்களை சட்டவிரோதமாக விற்ற குற்றத்திற்காகவே பாகிஸ்தான் விசாரணை நீதிமன்றம்இந்த சிறைத்தண்டனையை விதித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரதம மந்திரி பதவியை தவறாகப் பயன்படுத்தி

இம்ரான்கான் 2018 முதல் 2022 வரை தனது பிரதம மந்திரி பதவியை தவறாகப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்றபோது கிடைத்த பரிசுப் பொருட்கள் உட்பட்ட, 140 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் ($635,000) மதிப்புக்கும் அதிகமான அரசு உடைமைகளை வாங்கவும் விற்கவும் செய்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் மனு

எனினும் கானின் வழக்கறிஞர் இன்டெசர் பன்ஜோதா(Intezar Panjotha),காவல்துறையினர் கானை அவரது வீட்டில் இருந்து கைது செய்ததாக கூறினார். இந்த முடிவை எதிர்த்து நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறோம்,” என்று தெரிவித்தார்.