ரிசாட்டின் கைதுக்கு எதிராக பேச முடியுமா? கடும் தொனியில் சாடிய இம்ரான் மஹ்ரூப்

arrest rizad imran mahrub
By Vanan Apr 25, 2021 09:02 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட்டின் கைதுக்கு எதிராகப் பேச அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தைரியம் உள்ளதா? என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நல்லாட்சி அரசாங்கத்தை குறைகூறி பாரிய பொய்களுக்கு மத்தியில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது . ஆட்சிக்கு வர அவர்கள் கூறிய அனைத்தும் பொய் என மக்கள் உணர ஆரம்பித்துள்ளதால் அதை தடுக்க தமது சர்வாதிகாரத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

மக்களின் எதிர்க்கட்சியாக சீனி ஊழல், தேங்காய் எண்ணெய் மோசடி, காடழிப்பு, துறைமுக நகரம், ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட விடயங்களை மக்கள் முன் நாம் வெளிக்கொண்டு வந்தோம்.

அதில் முக்கியமான பாத்திரமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ செயற்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அரசு இன்று அவரைக் கைதுசெய்ய முயற்சிக்கிறது. இதன் உண்மைத் தன்மை வெளியில் தெரிந்ததும் வழமைபோல் இனவாதத்தை தூண்டி தமது இயலாமையை மறைக்க ரிசாட்டைக் கைது செய்துள்ளனர்.

இந்தக் கைதுகளுக்கு அஞ்சி எதிர்க்கட்சி வாயை மூடி இருக்காது - இன்று ரிசாட் சார்பாக பேச அவர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருமில்லை. ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களே ரிசாட்டுடன் உள்ளனர்.

அனைவரும் இருபதுக்கு கை உயர்த்தியதால் அவர்களின் வாய்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இவர்களின் கட்சித் தலைவர் கைது செய்யப்பட்ட போது வாய் திறக்காத இவர்களின் வாய் அரசாங்கத்துக்கு வால் பிடிக்க மட்டும் திறக்கப்படுகிறது.

கடந்த வாரம் ரிசாட்டின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் மிகவும் சத்தமாக நல்லாட்சி அரசுக்கு எதிராக பேசினார். வெட்கம் , அந்த அரசில் தான் அவரும் இருந்தார்.

அரசால் வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் பெற்றுவிட்டு இன்று இந்த அரசுக்கு வால் பிடிக்க கேவலமான அரசியல் செய்கிறார். அவரால் முடிந்தால் அதே சத்தத்துடன் அவரின் கட்சித் தலைவர் ரிசாட்டின் கைதுக்கு எதிராக பேச முடியுமா? தைரியம் உள்ளதா ?

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதலின் இரண்டு வருட பூர்த்தி அனுஷ்டிக்கப்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மையில் அரச உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும் முஸ்லிம் தலைவர்களுக்கு எதிராகவும் இனவாதக் கூச்சலிட்டனர்.

அப்போது கூட இருபதுக்கு வாக்களித்த உறுப்பினர்கள் எதுவும் பேசாமல் வெளியே ஓடிவிட்டனர். அப்போது கூட நாம் தான் முஸ்லிம் தலைவர்களுடன் இருந்தோம் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025