கைது செய்யப்பட்ட யோஷித எந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்...! வெளியானது தகவல்
இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச(yoshitha rajapaksa), எந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள ஒரு பொது விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் கூறினார்.
நாமல்,சானக வருகை
யோஷித ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதிலிருந்து விசேட தேவைகள் எதையும் கோரவில்லை., நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச(namal rajapaksa) மற்றும் டி. வி. சானக d.v. chanaka)ஆகிய இருவரும் சிறைச்சாலைக்கு ஞாயிற்றுக்கிழமை (26) வந்து யோஷிதவை பார்வையிட்டனர்.
இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால், சிறைச்சாலை கண்காணிப்பில் உள்ள யோஷித ராஜபக்சவை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையர் காமினி பி. திசாநாயக்க மேலும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |