கோட்டாபய அரசின் இயலாத்தன்மை- புட்டுக்காட்டிய ரணில்
education
goverment
ranil
gotabaya
salary issue
By Sumithiran
ஆசிரியர்களின் சம்பள விவகாரத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை எடுத்த முடிவை நடைமுறைப்படுத்த அனுமதித்திருந்தால் தற்போதைய பிரச்சினை எழுந்திருக்காது என்று ஐ.தே.க தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறிய விக்கிரமசிங்க, ஆட்சிக்கு வந்தவுடன் வருவாயை இழந்த தற்போதைய அரசுக்கு இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக நாட்டின் மாணவர்களுக்கு முறையான கல்வி கிடைக்காததால், அரசு உடனடியாக இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.